• காலன் The life snatcher

        

    காலன்

     

    குளியலறைக் கதவைத் திறந்தவுடன் கணேசன் கண்ணில் பட்டது, அண்டா தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த சின்னக் குருவி.'

     

    எங்கேயிருந்து வந்து விழுந்திருக்கும்?' கணேசன் கூரையைப் பார்த்தான். அண்டாவிற்கு நேர் மேலே கூரை மூலையில் வைக்கோல், குச்சிகளுடன் ஒரு குருவிக் கூடு. பல 5 வருட காலமாக அங்கே அந்தக் கூடு இருந்தது கணேசனுக்குத் தெரியும். சில சமயங்களில் குருவிகள் அதில் வாழ்ந்தன. அப்போதெல்லாம் கீச்சுக்கீச்சு என்ற சப்தம்' ஓயாமல் கேட்கும். சில சமயங்கள் கூடு வெறுமையாக. இருக்கும். இப்போது மறுபடியும் குருவிகள் குடிபுகுந்திருக்கின்றன. இந்தக் குருவி அங்கேயிருந்து தவறி' விழுந்திருக்கும். நுனி அலகு நீருக்கு மேற்பரப்பில் 10 தெரிய, செத்தது போல, அசைவு இல்லாமல் மிதந்தது. கணேசன் விளக்கைப் போட்டான். அண்டாவில் மிதந்துகொண்டிருந்த குருவியைச் சூழ்ந்திருந்த நீர்ப்பரப்பில் சலனம் இருந்தது. குருவி ரொம்பச் சிறியது, இப்போதுதான் இறக்கைகள் முளைக்கின்றன போலிருக்கிறது." கணேசன் ஒற்றை விரலால்

     

    குருவியைத் தொட்டுப்பார்த்தான். " அசைவு தெரிந்தது. " உயிர் இருக்கிறது என்று உறுதியாயிற்று.''குளியலறை மூலைகளில் கணேசனுடைய கண்கள் அலைந்தன." குப்பை வாரும் பிளாஸ்டிக் தட்டு ஒரு மூலையில் சாத்தி வைத்திருந்தது.

     

    கணேசன் அதை எடுத்துவந்து அண்டாவிற்குள் மிதந்துகொண்டிருந்த குருவிக்குக் கீழே செலுத்தி மிதக்க விட்டான்." அவன் எதிர்பார்த்தது போல, குருவி மெதுவாக அசைந்து தட்டுத்தடுமாறித் தட்டில் ஏறி நின்று ஓரிரு முறை சிலிர்த்துக்கொண்டது." இருந்தாலும், ரொம்ப நேரம் தண்ணீரில் "மூழ்கியிருந்ததாலோ என்னவோ, பறக்கின்ற தெம்பு இல்லாமல் அப்படியே மௌனமாகத் தட்டில் நின்றது." *தட்டோடு மெல்ல குருவியைக் கணேசன் வெளியே எடுத்தான். குருவி மறுபடியும் சிலிர்த்துத் தட்டின் நடுப்பகுதிக்கு நகர்ந்தது. வெயில் பட்டால் சரியாகிவிடும்." கணேசன் குருவியைத் தட்டோடு

     

    ஏந்திக்கொண்டு உள்ளறைகள் வழியே" புகுந்து ஆட்டாமல் அசைக்காமல், ஜாக்கிரதையாக, வாசல் பக்கம் கொண்டுபோனான். கதவைத் திறந்து கையில் தட்டை ஏந்தியபடி "வெளியில் இருந்த அந்தி வெயிலை நோக்கி ஒரு அடி.

     

    அப்போது, அவன் வைத்திருந்த தட்டின் மீது பாய்ந்து கறுப்பு மின்னல் போல் சுழன்று மறைந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு அண்டங்காக்கை." நீர்த்துளிகள் முகத்தில் தெறித்தன. என்ன நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளக் கணேசனுக்குச் சில நொடிகள் பிடித்தது."

     

    அவன் கையில் ஏந்தியிருந்த தட்டு இப்போது காலியாக இருந்தது.

     

    The life snatcher

     

    As soon as he opened the bathroom door, a little sparrow that was floating on the surface of water in the large container came into Ganesan's view.

     

    Where had it come from and fallen here? Ganesan looked at the ceiling. Directly above the container, in a corner just below the (tiled) roof was a sparrow's nest of straw and twigs. Ganesan knew that the nest had been there for many years. On some occasions, sparrows had lived in it. On all those occasions, the sound of chirping was heard incessantly. Sometimes the nest would be empty, and silent. Now sparrows had moved in again. This sparrow must have fallen out of it. The sparrow floated, as if dead, without movement, the tip of its beak visible on the surface of water. Ganesan switched on the light. There was movement on the surface of the water around the sparrow in the container. The sparrow was very small. It looked as if its wings were only just growing. Ganesan touched the sparrow, feeling it with his finger. He felt movement. That confirmed that it was alive. Ganesan's eyes searched à the bathroom corners. There was a dustpan used for collecting sweepings; it was kept leaning against the wall in the corner.

     

    Ganesan picked it up and brought it and let it float, pushing it under the sparrow in the container. Just as he expected, the sparrow moved slowly and staggered onto the dustpan, and stood there and shook itself a few times. However, because it had been submerged in water for a long time or because of something else, it just stood there without the energy to fly. Ganesan lifted the sparrow out gently, together with the dustpan. The sparrow shook itself once again and moved to the middle of the dustpan. Once the sunlight fell on it, it would be all right. Holding the sparrow aloft, together with the dustpan, and going through the inner rooms, Ganesan took it carefully toward the door without rocking or shaking (it). Opening the door and holding the dustpan in his hands, he took a step toward the evening sunlight..

     

    At that moment, a raven coming from somewhere or other swooped down onto the dustpan that he held, and, whirling like black lightning, vanished. Drops of water splashed onto Ganesan's face. It took him a few seconds to realise what had happened.

     

    The dustpan that he was holding was empty now.


  • Commentaires

    Aucun commentaire pour le moment

    Suivre le flux RSS des commentaires


    Ajouter un commentaire

    Nom / Pseudo :

    E-mail (facultatif) :

    Site Web (facultatif) :

    Commentaire :