-
தந்திரமுள்ள தாய் The wily mother
தந்திரமுள்ள தாய்
தாயும் பிள்ளையும் வசித்துவந்தார்கள், ஒரு ஊரில்.
மகனுக்குத் திடீரென்று தேசாந்திரம் போய்வர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
தாய் கூடியமட்டும் புத்திமதி சொல்லித் தடுத்துப்பார்த்தாள். முடியவில்லை.
மகன் புறப்பட்டு விட்டான்.
புறப்படும்போது மகனிடம் தாய் ஒரு வாக்குறுதி கேட்டாள்.
"நீ போகும்போது இரவானாலும் பகலானாலும் புளிய மரத்து நிழலிலேயே தங்க வேண்டும். திரும்ப வரும்போது இரவும் பகலும் வேப்ப மர நிழலிலேயே தங்க வேண்டும்."
மகனும் சத்தியமாக அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு பயணப்பட்டான்." போகிற வழியில் நெடுக, புளிய மரத்தடியிலேயே தங்கல்போட்டான்." ஏழாவது நாளில் உடம்புக்குச் சுகம் இல்லாமல் போய்விட்டது." மிகவும் பலவீனம் அடைந்துவிடவே' இனி தன்னால் நடக்க முடியாது என்ற நிலையில் ஊருக்குத் திரும்பினான். திரும்புகையில் வழி நெடுக" வேப்ப மரத்து நிழலில் தங்கினான். நாளுக்கு நாள் உடல்நிலை சௌக்கியம் அடைந்து ஏழாம் நாள் வீட்டுக்கு வரும்போது பூரண சுகம் அடைந்துவிட்டான்."
தேசாந்திரம் போன மகன் பதினாலாம் நாளே திரும்பிவிட்டதைக் கண்டு தாயார் கொஞ்சம்கூட ஆச்சரியப்படவில்லை.
"மகனே, புளிய மர நிழல் உஷ்ணத்தையும் உடம்புக்குச் சீக்கையும் கொடுக்கும்." எனவே, நீ தொடர்ந்து புளிய மர நிழலில் தங்கினதால் நோய்க்கு ஆளாகிப்" பயணத்தை நிறுத்திவிடுவாய். திரும்பி வரும்போது வேப்ப மர நிழலில் தங்கி வந்தால் அதனுடைய குளிர்ச்சியில் எந்தச் சீக்கும் எடுபட்டுப்போகும்." குணத்தோடு வீடு வந்துசேருவாய்.18 உனது தேசாந்திரப் பயணத்தைத் தடுக்கவே இப்படி உபாயம் செய்தேன்” என்று தனது திட்டத்தை மகனிடம் விளக்கினாள், அந்தத் தாய்.
The wily mother
A mother and her son were living in a village. All of a sudden the son felt a desire to go off on a long journey. The mother tried as far as possible to prevent him, by advising (him) against it. She was unable to do so. The son set off. Just as he was on the point of leaving, the mother asked him to make a promise.
"When you are on your way, whether it is day or night, you should always keep only in the shade of the tamarind tree. And on your way back you should always keep only in the shade of the neem tree, both by day and by night."
The son agreed that he would surely do so, and he set out.
Throughout his outward journey he kept under tamarind trees. On the seventh day he was taken ill. Having become very weak and being unable to walk any further he turned home. Throughout his return journey he kept in the shade of neem trees. Day by day he recovered from his illness; and when he reached home on the seventh day he had regained full health.
The mother was not in the least surprised to find the son, who had set off on a long journey, returning (already) on the fourteenth day.
"Son, the shade of tamarind trees generates heat and brings disease to the body. So, keeping continuously in their shade you would succumb to disease and discontinue (your) journey. On the way back, as you were in the shade of neem trees, any disease would be completely cured by (their) coolness.
You would arrive home in good health. I used a ruse in this way to prevent your (going on a) long journey." Thus did the mother explain her scheme to her son.
-
Commentaires